Posts

Showing posts from October, 2022

தங்கத்தில் நகை செய்து அணிந்தால் தேய்மானம் உண்டா, இல்லையா? அப்படி தேய்ந்து கரைந்து போகும் துகள் தங்கம் உங்கள் கண்களுக்கு புலப்படுமா ?

Image
அன்புடையீர் வணக்கம் பொது மக்கள் அனைவரும் பொருமை யுடன் நிதானமாக சிந்திக்க வேண்டும். நீங்கள் ஒரு தங்க சங்கிலி வாங்கி அதை தொடர்ந்து அணிந்து இருந்தால் அது இணைப்பு காதுகள் தேய்ந்து இத்துபோய் அறுந்து போகும் நிலை ஏற்படுவதும் உண்டு தானே? உதாரணத்துக்கு ஒரு ஐந்து சவரன் சங்கிலி என்று வைத்துக் கொள்வோம். அது சரியாக செய்யப்பட்டு இருந்தால் குறைந்த பட்சம் ஐந்து வருடம் தொடர்ந்து அணிந்திருந்தால் அது நன்கு தேய்த்து நீண்டு வந்திருக்கும். அப்படி தேய்ந்ததில் குறைந்த பட்சம் ஒரு மூன்று கிராம் தேய்ந்து மொத்த எடை நாற்பது கிராமில் மூன்று கிராம் குறைந்து ஒரு முப்பத்திஏழு கிராம் தான் உள்ளது என வைத்துக் கொண்டால் ( இந்த கணக்கு ஒரு உத்தேசம் தான் மேலும் சுத்தமான 916 % தங்கத்தில் தாயாரித்த நகைகள் சற்று விரைவாக தேயத்தான் செய்யும் அப்படி தேயும் தங்கத்தின் எடையும் கூடுதலாக தான் இருக்கும் ! ஏனென்றால் 916% தங்கம் மிகவும் மிருதுவானது அது சீக்கிரம் தேயும் குணம் கொண்டது ) அந்த தேய்ந்து உரு தெரியாமல் தங்கம் எங்கே போனது? அது யாருக்காவது பயன் பட்டதா? அல்ல அதை உங்களால் கண்டு பிடித்து எடுக்க தான் முடியுமா? ஆக அப்படி போனதுக்கு பெயர...