தங்கத்தில் நகை செய்து அணிந்தால் தேய்மானம் உண்டா, இல்லையா? அப்படி தேய்ந்து கரைந்து போகும் துகள் தங்கம் உங்கள் கண்களுக்கு புலப்படுமா ?
அன்புடையீர் வணக்கம் 
யுடன் நிதானமாக சிந்திக்க வேண்டும். நீங்கள் ஒரு தங்க சங்கிலி வாங்கி அதை தொடர்ந்து அணிந்து இருந்தால் அது இணைப்பு காதுகள் தேய்ந்து இத்துபோய் அறுந்து போகும் நிலை ஏற்படுவதும் உண்டு தானே? உதாரணத்துக்கு ஒரு ஐந்து சவரன் சங்கிலி என்று வைத்துக் கொள்வோம். அது சரியாக செய்யப்பட்டு இருந்தால் குறைந்த பட்சம் ஐந்து வருடம் தொடர்ந்து அணிந்திருந்தால் அது நன்கு தேய்த்து நீண்டு வந்திருக்கும். அப்படி தேய்ந்ததில் குறைந்த பட்சம் ஒரு மூன்று கிராம் தேய்ந்து மொத்த எடை நாற்பது கிராமில் மூன்று கிராம் குறைந்து ஒரு முப்பத்திஏழு கிராம் தான் உள்ளது என வைத்துக் கொண்டால் ( இந்த கணக்கு ஒரு உத்தேசம் தான் மேலும் சுத்தமான 916 % தங்கத்தில் தாயாரித்த நகைகள் சற்று விரைவாக தேயத்தான் செய்யும் அப்படி தேயும் தங்கத்தின் எடையும் கூடுதலாக தான் இருக்கும் ! ஏனென்றால் 916% தங்கம் மிகவும் மிருதுவானது அது சீக்கிரம் தேயும் குணம் கொண்டது ) அந்த தேய்ந்து உரு தெரியாமல் தங்கம் எங்கே போனது? அது யாருக்காவது பயன் பட்டதா? அல்ல அதை உங்களால் கண்டு பிடித்து எடுக்க தான் முடியுமா? ஆக அப்படி போனதுக்கு பெயர் சேதாரம் தானே?????
எனவே நீங்கள் அதை அணிந்து மட்டும் தானே இருந்தீர்கள் ? அல்லது அரம் போன்ற ஆயுதம் கொண்டு தேய்த்தீர்களா ? அல்லவே ஆக அப்படி அணிந்த நிலையில் உங்களது தங்கம் தேய்ந்து போய் சேதாரம் ஆகும் என்றால் அந்த நகையை தயாரிக்க பல வழிகளில் கம்பி, தகடு, போன்ற உருவ மாற்றங்கள் செய்து மேலும் இணைப்பு களை பொருத்துவதற்காக ஸ்டீல் அரம் கொண்டு தேய்த்து ராவிடும் போது அந்த சிறு துகள்கள் காற்றில் பறப்பதும் கண் களுக்கு புலப்படாமல் போவது இயல்பு தானே? ஆக அதை பின்னர் குப்பை கூட்டி கழுவி எடுத்து விடுவார்கள் என நீங்கள் நினைக்கலாம் ! உள்ளபடியே அப்படி சேதாரம் ஆன தங்கத்தை அவ்வளவு துல்லியமாக எடுத்துவிட முடியாது என்பதே சத்தியமான உண்மை !!
மேற் சொன்ன விபரங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் உள்ளபடியே எந்த ஒரு பொருளையும் உருவாக்க உரிய கூலி அல்லது சம்பளம் கொடுத்து தானே ஆக வேண்டும்? அந்த வகையில் தங்க நகை தயாரிக்கும் தொழிலில் ஒரு குறிப்பிட்ட காலம் நேரம் வரைமுறை கிடையாது. அதாவது ஒரு நாளுக்கு எட்டு மணிநேரம் வேலை என்பது போல வரையறுத்து பின் ஓய்வு எடுப்பது என்பது இயலாது. ஆக ஒரு வேலை எடுத்தால் அது ஒரு முறை யான வடிவம் வரும் வரை பத்து அல்லது பன்னிரெண்டு மணிநேரம் கூட தொடரும் அப்படி இல்லாமல் நேரம் காலம் பார்த்து விட்டு விட்டு செய்தாலோ அல்ல உணவு இடைவேளை என்று அப்படியே விட்டு எழுந்து செல்லவோ முடியாது அப்படி சென்றால் மேலும் கூடுதலாக சேதாராம் ஆகும். அது தவிர ஒரு நகை மாடலை பொருத்து தயாரிக்க கூடுதல் நாட்கள் மற்றும் ஆட்கள் தேவைபடலாம் அதனால் நேரம் காலத்தில் பசியாற கூட முடியாது. இது போன்ற கஷ்ட நஷ்டங்கள் நகையை அதன் நேர்த்தியை மட்டுமே பார்த்து ரசிப்பவர்களுக்கு தெரியாது. ஆக இப்படி கடுமையாக உழைப்பவர்கள் ஊதியமாக பெறுவது தான் கூலி சேதாரம் என்பது. இதில் கூலி என்ற ஒரு சொல் சேர்ந்து வருவதால் மட்டுமே நகை உருவாக்க கூலி வாங்கி கொண்டு கூடுதல் தங்கத்தில் சேதாரமும் பெறுகிறார்கள் என்கிற தவறான எண்ணம் உருவாகி இன்றைய நிலையில் சேதாரம் என்பதை மறுக்கும் அளவுக்கும் சேதாரமே ஆகாது என்றும் தவறான பேச்சும் எழுகிறது. ஆக உள்ளபடியே நகைகள் தயாரிக்கும் போது ஏற்படும் செய்முறை சேதாரம் என்பதை யாராலும் தவிர்க முடியாது. அது போல நகை பட்டரையில் ஆகும் சில்லறை செலவு வகைகளையும் தவிர்க இயலாது. ஆக கூலி என்பது ஒரு அடையாள ரூபாய் மட்டுமே அது போக சேதாரம் என்பதே உழைப்புக்கு உற்ற ஊதியம் என்பதை பொது மக்களும் வாடிக்கையாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆக இது போன்ற விளக்கங்கள் விபரங் களை யாரும் சொல்ல முன் வராததால் நகை தயாரிக்க கூலி பெற்று கொண்டு கூடுதலாக சேதாரம் வாங்குகிறார்கள் என்கிற தவறான வதந்தியை பரப்பி அதில் பல நகை வியாபாரிகள் நகை செய்யும் கைவினை கலைஞர்கள் மீது தவறாக பழி சுமத்தும் நிலையே உள்ளது. எனவே இது போன்ற வதந்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்க இனி எதிர்வரும் காலங்களில் தங்க நகைகளுக்கு செய்கூலி, சேதாரம், என்று இல்லாமல் தயாரிப்பு செலவு ( மேக்கிங் ஜார்ஜ் ) என்று நகையை பொருத்து எடைக்கு தக்கபடி நிர்ணயம் செய்து ஒரு கிராமுக்கு இந்த அளவு என்று ஒருமுக ஊதியமாக கணக்கிட்டு வழங்குவதும், பெறுவதும் தான் சரியானதாக இருக்கும் !! சம்பந்த பட்டவர்கள் அதுபற்றி கூடி பேசி முடிவு எடுக்க வேண்டும். மேற்கண்ட முறையில் வெளிநாடுகளில் ஏற்கனவே பின்பற்ற பட்டும் வருகிறது !! என்பதையும் நினைவு கொண்டு ஆவன செய்ய வேண்டும் !!
மேலும் தங்க நகைகளை பொருத்த வரை கைவினை கலை மூலம் தயாரிக்க படும் நகைகள் மட்டுமே நீண்டகாலம் உழைக்கும் அது மட்டுமல்லாமல் மேற்சொன்ன விபரங்கள்படி தயாரிப்பு சேதாரம் என்பது மிஷின் தயாரிப்பு நகைகளில் மானாவாரியாக சேதாரம் கூடுதலாக தான் போகும் ஆனால் அவற்றை ஈடுகட்ட வேண்டிய கட்டாய சூழலும் மிஷின் நகைகளுக்கு உண்டு. ஆக கைகளால் தயாரிக்கபடும் நகைகளுக்கு மனித உழைப்பு உன்னத உயிரோட்டத்துடன் செய்பவரின் ஆத்ம திருப்தியும் கூடி நல்ல ஆசீர் வாதத்துடன் இருக்கும். ஆனால் மிஷின் தயாரிப்பு நகைகள் எந்திரகதி மட்டுமே இருக்கும். ஆக கைவினை தயாரிப்பு உழைக்கும் அளவு மிஷின் நகைகள் உழைக்காது. ஆகவே இப்படிப்பட்ட பல விஷயங்களை சிந்தித்து நிதானமாக தங்க நகைகளை வாங்கி அணியுங்கள். ஆக எதையும் தயாரிக்க ஆகும் செலவினங்களை உபயோகிப்பாளர்கள் கொடுத்து தானே வாங்க வேண்டும் ? அந்த வகையில் தங்கத்தில் சேதாரம் என்று இல்லாமல் உழைப்புக்கு தக்க ஊதியமாக தருவது தானே முறையானதாக இருக்கும் ? ஆக கால மாற்றங்களை கருத்தில் கொண்டு நாமும் மாறுவோம் மாற்றம் என்பது அவசியம். அது ஏமாற்றமாக இல்லாமல் இருப்பது தான் சிறப்பு !!
வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !!!
அன்புடன்:- KNV நடராஜன் விஸ்வகர்மா.
******************************************
Comments
Post a Comment