பெண் இனத்தில் உள்ள பெருமைகளை போற்ற வேண்டும்

 மாமியார் மருமகள் உறவை வைத்து எத்தனை சீரியல்கள் எடுத்தாலும்

எதிலும் நல்ல உறவுமுறை காட்டபடுவதில்லை.

    நடைமுறையில்,
ஒரு  மகன் தனது தாயின் உடற்ப்பினி மோசமான நிலையில் வேதனை உற்று தவிக்கிறான்.
தன்னால் முடிந்த அனைத்து சேவைகளும் செய்கிறான் உதவிக்கு தனது மனைவியை அழைக்கிறான்.
எவ்வித தயக்கமும் இன்றி தனது அத்தைக்கு மகளாக மாறுகிறாள். 
இயற்கை உபாதை ஏற்படுகிறது ,
உடன் அருகில் நின்று  அதற்குரிய உதவி புரிகிறாள் .  
அந்த பெண்மைக்கு தலைவணங்கி போற்ற படவேண்டும். அதனால்தான் அந்த உறவுக்கு மறு'மகள்' என பெயர் வைத்தார்கள் போலும்.












பெண்ணின் தாய்மை உணர்ச்சிக்கு எத்தனையோ உவமானங்கள், பெருமைகள் இருக்கிறது.

      சதுரங்க விளையாட்டில் கூட ஒரு சிப்பாய் கஷ்டப்பட்டு ஏழு கட்டம் தாண்டி எட்டாவது கட்டத்தில் யானை,குதிரை,மந்திரி என மாற வாய்ப்பு  பெற்றாலும் பெறும்பாலும் ராணியாக மாற்றி ஆட்டத்தில் வெற்றி பெற்று முடிப்பார்கள்.
ராஜாவை காப்பாற்ற இன்னொரு ராஜா வருவதில்லை சதுரங்கத்தில்.


அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி,
அண்ணன்,அக்கா,தம்பி, தங்கை இப்படி உறவுகள்  உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் நிதானமாக வார்த்தைகளை பேச வேண்டும். அவர்கள் மனம் புண்பட செய்யாது கவனமாக இருக்க வேண்டும்.

   இதுபோன்ற உறவுகளை விட்டு, நம்பி வரும்  மனைவிக்கு கூடுதலாக அன்பு பாராட்டி, தேங்காய் உடைத்து சிதறும் சில்லுகளாய் மனசிதறல் ஏற்படாமல், ஒரு கூட்டு பறவைகளாக கூடி வாழவேண்டியது
கணவனின் பொறுப்பு அல்லவா .


எண்ணத்தில் உதயமானது
22.9.24
🕐1.00AM
N.V

Comments

Popular posts from this blog

சில உண்மைகள் புாியாமலும், பல உண்மைகள் மறைக்கப் பட்டும், இன்றைய வியாபார வா்த்தக உலகம் இயங்குகிறது அதன் உண்மை நிலை !!