தங்கத்தின் தரநிர்ணயம்





ஒரு காலத்தில் தொழில் ரகசியம் என்று ஒன்று இருந்தது. இன்று எல்லாம் வெளிபடையாக உள்ளது.
ஒரு பொருளை உற்பத்தி செய்யும் தொழிலாளி கொடுக்காத தர நிர்ணயத்தை வேறு யாரும் கொடுக்க முடியாது.
என்னால் உருவாக்கிய ஒரு தங்க நகையின் தரம் என்னை தாண்டி வெளி நபர் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
தான் செய்யும் நகையின் தரத்திற்கு தானே பொருப்பு, அதை சான்றிதழாக கொடுக்க முன் வரவேண்டும்.
அழிந்து வரும் கைத்தொழில் வரிசையில் நகைத்தொழில் முதலில் இருகின்றது அதை மாற்றபடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் . இடைதரகர்கள் இல்லாத தொழில்முறை வேண்டும்.
ஒரு நகை செய்யபடுகிறது என்றால் அதற்கான நியாயமான ஊதியம் கிடைக்க வேண்டும்.
அப்படி செய்யபடும் நகையில் 22ct எனில் தங்கத்தின் தரம் 91.6 % என உறுதி சான்று கொடுக்க முடியும்.
அந்த குறிப்பிட்ட நகையின் அன்று உள்ள மார்கெட் ரேட் வைத்து அனைவராலும் பணமதிப்பு சுலபமாக அறியமுடியும்.
அசையா சொத்து வாங்கினால் பத்திரம் எந்த அளவு முக்கியமோ அதேபோல் நகைகளுக்கு மதிப்பு சான்றிதழ் முக்கியம்.
வாடிக்கையாளர்களுக்கு சந்தேகம் இருந்தால் அதன்பின் மறுமதிப்பீடு செய்து தரம் மாறுபட்டால் சான்றிதழ் கொடுத்த நகைத்தொழிலாளி மீது வழக்கு பதிந்து சட்டபடி நடவடிக்கை எடுக்கலாம்.
இது சரி என பட்டால் பகிரலாம்.
மேலான கருத்துக்களைபதிவு செய்யுங்கள்.
by,Vaithi Natrajan.

Comments

Popular posts from this blog

பெண் இனத்தில் உள்ள பெருமைகளை போற்ற வேண்டும்

சில உண்மைகள் புாியாமலும், பல உண்மைகள் மறைக்கப் பட்டும், இன்றைய வியாபார வா்த்தக உலகம் இயங்குகிறது அதன் உண்மை நிலை !!