மிக கொடிய மிருகம்

 உலக வாழ்க்கையில் எந்த "இரை"யும்  இந்தா என்னை புசித்து உன் பசி போக்கி கொள் என்று சொல்வதில்லை. 


மிருகம் தன்  பசியை தவிர வேறு எதற்கும் பெரிய அளவிலான போராட்டம்  செய்வதில்லை.




மனிதனின் போராட்டம் இரை மட்டுமல்ல பொருள், பெருமை, வசதி, அந்தஸ்து  

என பலவகையில்  போராட்டம் உள்ளது.  அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறான். 


இல்லாதவனை இருப்பவன் ஏய்க்கிறான் அது வியாபாரமாகி போனது. 


ஏழைக்கு எட்டா கனியானது கல்வி.

காசை கொட்டி படிக்க வைத்தால் மட்டும் போதும் மாதசம்பளம் பல லகரத்தில் கிடைக்க கல்லூரி கூடங்கள்  உத்திரவாதம் அளிக்கிறது.


நல்லதை சொல்லி திருத்த வேண்டிய  பொழுதுபோக்கு அம்சம் குப்பைகளை அள்ளி வீசுகிறது.

 குப்பை ஆனது மனிதமனம் மட்டுமல்ல சுற்றுச்சூழலும் தான். 



குடி போதை வஸ்துகளை நியாயப்படுத்தி,  எவன் குடி எப்படி கெட்டால் எனக்கென்ன என்று கல்லா கட்டி, ஊற்றி கொடுக்கும்   பெருங்கூட்டமே உள்ளது. 

 

இறைவன் படைப்பில் மிக கொடிய மிருகமாக மனிதன் மாறுபட்டுதான் இருக்கிறான்.  


முன்பொரு காலத்தில்....

 

வாழ்க்கையில் எந்த உயிர்களும் தீங்கு ஏற்படுத்தாமல், அன்பு பாராட்டி ஆன்மீகத்தில் வழிநடத்தி  முக்தி அடைந்த புனிதர்கள்  உண்டு. 


தன்னலம் குறைத்து இனத்திற்காக பாடுபட்டவர்கள் அரசியலில் பெருந்தலைவர் ஆனார்கள்.   


தன் குடும்பம் தழைக்க தன்னையே அர்பனித்த குலதெய்வமாக பலர் உண்டு. 


நீர், காற்று, சுற்றுசூழல் சுத்தமாக இருந்தது. இயற்கையை ஆராதித்து 

இன்புற்று வாழ்ந்தார்கள்.


அப்படி இருந்த நல்லுலகம் இப்போது எங்கு சென்று மறைந்தது.

இதையெல்லாம் மீட்டு எடுப்பவர் யார்?  


இயற்கைதான் ! 

 எவ்வளவு பேரிடர் நடத்தி தன் எதிர்பபை காட்டி எச்சரிக்கை செய்தாலும், மனிதமனம் அந்த நேரத்தில் உணர்ந்தாலும், அடுத்தடுத்து நிகழும் இயல்பான வாழ்வியலில் மறந்து அடுத்த தவறு செய்ய விழைகிறது.


 இது இப்படியே நீடித்தால் மிகபெரும் பேரிடர்களை சந்தித்துதான்  ஆகனும்.

 


N.V

25/10/24

5.30 AM

Comments

Popular posts from this blog

பெண் இனத்தில் உள்ள பெருமைகளை போற்ற வேண்டும்

சில உண்மைகள் புாியாமலும், பல உண்மைகள் மறைக்கப் பட்டும், இன்றைய வியாபார வா்த்தக உலகம் இயங்குகிறது அதன் உண்மை நிலை !!