எண் கணித சோதிடமும், ராசிகற்கள், அணியும் விபரங்களும்
இந்த பதிவு சற்று நீண்டதாக தான் இருக்கும் ! ஆனால் அனைவருக்கும் பயன் உள்ளதாகவே இருக்கும் என்றால் அது மிகையல்ல ! முழுதும் படிக்கவும் !!!
எண் கணித சோதிடமும், ராசிகற்கள், அணியும் விபரங்களும் விபரமாகவும் ,
தக்க விளக்கங்கள் மற்றும் எண்கணித சோதிட பலன்கள் சுருக்கமாக தெளிவு படுத்தி பதிவு செய்துள்ளேன் !!!
****************************************
அன்புடையீர் வணக்கம் 🙏
இந்த பதிவு மிகவும் நீண்டதாக இருந்த போதும் இதை முழுவதுமாக படிக்கும் போது அவரவர் பிறவி எண் அறிந்து மற்ற அதற்கான பொது பலன்களை தெரிந்து கொள்ளலாம் ! மேலும் அனைவருக்கும் மிகவும் பயனளிக்க கூடியதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை !!!
மனிதன் விதியை மதியால் அறிந்து உணர்ந்து அதற்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்வதின் மூலம் நல்ல பலன்களை அடையலாம். அந்த வகையில் எண்கணித சோதிடம் மற்றும் ராசிக்கற்கள் அணிந்து ஓரளவு கெடு பலன்ங்களை குறைத்துக் கொள்ளலாம் !! மேற்கண்ட வகையில் முதலாவதாக எண் கணித சோதிடம் பற்றி பார்ப்போம். எண் கணித சோதிடத்தில் பிறப்பு எண் மிகவும் முக்கியம். இந்த எண்ணை யாரும் மாற்ற முடியாது. ஆக இந்த எண் நல்ல யோக பலன் தரக்கூடியதாக அமைந்து விட்டால் அதற்கு ஒத்துப் போகக்கூடிய வகையில் நட்பு எண்களாக வருமாறு பெயர் எண்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் அது மேலும் அந்த நபருக்கு நல்ல பலன்களை கொடுக்கும் !!
பிறப்பு எண் என்பது 12 ஆங்கில மாதம் எதுவாயினும் அதில் 1 ஆம் தேதிமுதல்
31 ஆம் தேதிவரை உள்ள நாட்களிலே
எந்த தேதியில் பிறந்தோமோ அந்த தேதி எண்ணே பிறப்பு எண்ணாகும். 1 முதல்
9 வரை அதை ஒற்றை இலக்கப் படுத்தி அந்தந்த எண்ணுக்கு உண்டான பலனை அறிய வேண்டும். அதில் 9 க்கு மேல் வரும் இரட்டை எண்களை ஒன்றோடு ஒன்று கூட்டி வரும் ஒற்றை இலக்க எண்ணாக மாற்றி கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு 12 ஆம் தேதி என்றால் 1+2= 3 என்றாகும் அது போல 21 என்றாலும் 2+1 = 3 தான் வரும் மேலும் 30 என்றால் அந்த ஜீரோவுக்கு மதிப்பு இல்லை அப்பவும் 3 தான் வரும் அது போல 29 என்றால் 2+ 9= 11 அதையும் 1+1 =2 என கூட்டி ஒற்றை இலக்காக மாற்றிக் கொள்ள வேண்டும். இப்படியாக ஒற்றை இலக்க எண்ணாக மாற்றி 1 முதல் 9 வரை உள்ள பலன்களை அறிந்து கொள்ளலாம்.
அப்படி மாற்றிக் கொண்ட எண்ணின் நட்பு எண்களை கொண்டு ஒருவர் தனது நல்ல செயல்களுக்கு முதன்மை படுத்த வேண்டும் அதனால் வெற்றி வாய்ப்புகள் கூடிடும் ! மேற்சொன்ன வகையிலே தங்களுக்கு சாதகமான முறையில் எண்களை தேர்வு செய்வதோடு அந்த எண்ணுக்கு உரிய ரத்தினத்தை ( ராசிகல் ) தங்கள் வசதிக்கு ஏற்ப தங்கத்திலே, வெள்ளியிலோ ஓப்பன் செட்டிங் செய்து மோதிரமாக அணியலாம். அதன் மூலம் கூடுதல் நல்ல பலன்களை அடையலாம். அதாவது உடல்நலம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் வியாபாரம், அனைத்திலும் 100% வெற்றி நிச்சயம். அந்த வகையில் விதியை மதியால் அறிந்து உணர்ந்து ஓரளவு மாற்றிட முடியும் !!
*முயற்சி திரு வினையாக்கும்* என்பதும் உண்மை !!
அடுத்து ராசிகற்கள் பற்றிய விபரங்கள் :-
நவரத்தினங்களும் அவற்றை அணியும் விபரங்களும் :-
"நவம்" என்றால் ஒன்பது என்று பொருள். நவகிரகம், நவராத்திரி, நவரசம், என்பது போல * நவரத்தினம் * வாணவியலில் அடிப்படையில் சோதிடம் கணிக்கப் படுகிறது. அது போல சோதிடத்திற்கும், புவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு ! சூரியன் மற்ற ஒன்பது கிரகங்களோடு மனிதர்கள் தொடர்பு உடையவர்களாகவே இருப்பதும் உண்மை. அத்துடன் நிற்கவில்லை இந்த மண்ணோடும், நீரோடும், மிகவும் தொடர்பு உடையவர்களாகவே இருக்கிறோம்! ஆக பூமியில் மண்ணோடு பாறைகளோடு கலந்து இருக்கும் வைரம், வைடூரியம், மாணிக்கம் ( சிகப்பு ) கோமேதகம், நீலம், புஷ்பராகம், மரகதம் ( பச்சை ) ஆகிய ரத்தினங்களும் ஆழ் கடலில் உள்ள முத்து, பவளமும், மனிதனுடன் தொடர்புடையதாக உள்ளன. இந்த நவரத்தினங்கள் மருத்துவ குணம் கொண்டவை என்பது மிகப் பழைய காலத்திலிருந்தே அறியபட்டது தான் !! நவரத்தினங்களை ஆபரணமாக செய்து அணிவதால உடல் ரீதியாக, மனரீதியாக, ஏற்படும் நோய்களை குணபடுத்த முடியும். இதையே நம் முன்னோர் மணி, மந்திரம், ஔஷதம், என்று சொல்லி உள்ளார்கள். அதாவது மனித உடல் நோய்களை கட்டுப் படுத்த முதலாவதாக "மணி" என்று சொல்லக் கூடிய நவரத்தினங்களை, உபயோகிப்பது பின் "மந்திரம்" எனும் செம்மையான சொல் உச்சாடணம் செய்வதும், பின்பே "ஔஷதம்" என்கிற மருந்தை பயன் படுத்துவது என்ற முறையை கையாண்டு உள்ளனர். அந்த வகையில் நவரத்தினங்களுக்கு நோய்கள் தீர்க்கும் குணம் உண்டு என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் அவரவர் ராசிபடியும் நவரத்தினங்களை மோதிரமாக, டாலராக, மற்றும் வேறு விதங்களில் ஆபரணங்களாக செய்து அணிவதால் உடல்கூறு சாஸ்த்திரப் படி கூடுதல் நன்மைகள் அடையலாம் !!!
இனி 12 ராசிகள், 9 நவரத்தினங்களில் எந்தெந்த ராசிக்கு எந்த எந்த ரத்தினம் என்பதை பார்ப்போம் !!
1, மேஷ ராசிக்கு( செவ்வாய்) பவளம்.
2 ரிஷப ராசிக்கு (சுக்கிரன்) வைரம்.
3, மிதுன ராசிக்கு ( புதன் ) பச்சை.
4, கடக ராசிக்கு (சத்திரன்) முத்து.
5, சிம்ம ராசிக்கு (சூரியன்) சிகப்பு.
6, கன்னி ராசிக்கு (புதன்) பச்சை.
7, துலாம் ராசிக்கு (சுக்கிரன்) வைரம்.
8, விருச்சிக, ராசி (செவ்வாய்) பவளம்
9, தனுசு ராசி ( குரு) கனகபுஷ்பராகம்.
10, மகர ராசிக்கு ( சனி ) நீலம் .
11, கும்ப ராசிக்கு ( சனி ) நீலம்.
12, மீனம் ராசிக்கு (குரு)கனகபுஷ்பராகம்.
மேற்கண்ட வகையில் ராசிக்கல்லை
தேர்வு செய்து அணிவதால் நல்ல பலன் அடையலாம் !!!
""""""""""""""""""""""""""""""""""""""""""""
எண் கணித சோதிடம் :- (நியூ மராலஜி)
எந்த ராசிக்கு என்ன ரத்தினம் என்பது
பற்றி முன்னதாக சொல்லி உள்ளோம். ஆனால் தன்னுடைய ராசி என்ன? என்று தெரியாதவர்களும் ரத்தினங்களை பயன் படுத்தலாம் அதற்கு உதவுவது எண்கணித சோதிடம். எண் கணித சோதிடத்தை பற்றி விபரங்கள் சொல்கிறோம். அதன்படி எந்த எண் உள்ளவர்கள் என்ன ரத்தினத்தை அணியலாம் என்று தெரிந்து கொள்ளலாம் :-
ஒருவர் பெயரில் உள்ள ஆங்கில எழுத்தை கொண்டு அதற்கான எண்ணை அறிந்து அந்த எண்களின் கூட்டுத் தொகையே அவரின் எண் என்று அறிக. அதற்கான எளிய வழி முறைகள் பின் வருமாறு !!
A, I, J, Q, Y, =. 1 என்றாகும்
B, K, R, =. 2 என்றாகும்
C, G, L, S,=. 3 என்றாகும்
D, M, T, = 4 என்றாகும்
E, H, N, X, = 5 என்றாகும்
U, V, W, =. 6 என்றாகும்
O, Z, = 7 என்றாகும்
F, P, =. 8 என்றாகும்.
9 ஆம் எண்ணுக்கு ஆங்கில எழுத்தை குறிப்பிடுவது இல்லை ஆனால் எண்கள் கூட்டுத் தொகை 9 என்றும் வரும் அந்த எண்ணுக்கு பலனும் சொல்லப்படும். இது தவிர பிறந்த ஆங்கில தேதியை கொண்டு எண் சோதிடம் அறியலாம் .
மாதிரி படிவம் உதாரணமாக :-
அவரவர் பெயரை ஆங்கிலத்தில் முன் எழுத்துடன் (இன்ஷியல்) எழுதி எண்களை கூட்ட வேண்டும்.
உதாரணம் 1 - S, NARAYANAN
S , N A R A Y A N A N
3, 5 1 2 1 1 1 5 1 5 = 25 =2+5=7 ஆக
எஸ் நாராயணனின் கூட்டு எண் " 7 "
இந்த எண்ணுக்கு உரிய ரத்தின கல் *வைடூரியம்*
உதாரணம் 2 - A. SYED ALI
A, S Y E D A L I
1, 3 1 5 4 1 3 1 = 19- 1+9= 10 = 1 ஆக
ஏ சையது அலி எண் 1 இந்த எண்ணுக்கு உரிய ரத்தினகல் சிகப்பு ( மாணிக்கம் )
உதாரணம் 3 - A , PAULANTONY
A, P A U L A N T O N Y
1, 8 1 6 3 1 5 4 7 5 1 = 42- 4+2= 6 ஆக
ஏ, பால் ஆன்டனியின் எண் 6 இந்த எண்ணுக்கு உரிய ரத்தினகல் வைரம்.
குறிப்பு :- வைரம் விலை உயர்ந்தது ஆன படியால் அதை வாங்க முடியாதவர்கள் உப ரத்தினமாகிய அமெரிக்கன் டைமன், அல்லது ஜிர்கான் கல் அணியலாம் !!
எண் கணித சோதிட படி எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த ராசிகல் அணியலாம், என்பதற்கான அட்டவணை :-
பிறந்த தேதி -- கூட்டு எண் -- ராசிகல்
""""""""""""""""""""""""""""""""""""""""""""
1, 10, 19, 28 ல் -- -- 1 ------ சிகப்புகல்.
2, 11, 20, 29 ல் ---- 2 ------- முத்து.
3, 12, 21, 30 ல் ---- 3 --- புஷ்பராக கல்
4, 13, 22, 31 ல் ---- 4 ---- கோமேதககல்.
5, 14, 23, ல் -------5 ---- மரகதபச்சஐ.
6, 15, 24, ல் ------ 6 ---- வைரகல்.
7, 16, 25, ல் -------7 ---- வைடூரியகல்.
8, 17, 26 ல் ------- 8 ---- நீலம் கல்.
9, 18, 27 ல் ------- 9 ---- பவளம்
மேற்கண்ட கற்களில் வைரம், புஷ்பராகம், நவரத்தினங்கள் ( 9 கல்) ஆகிய மோதிரம் தங்கத்திலும், வெள்ளியிலும் அணியலாம் மற்ற ராசி கற்களை வெள்ளியில் ஓப்பன் செட்டிங் செய்து அணிந்தால் முழு பலனும் கிடைக்கும். ராசிக்கல் மோதிரங்களை முழு நம்பிக்கையுடன் அணிந்து உரிய முயற்சி செய்தால் கல்வி,தொழில், வேலைவாய்பு,
வியாபாரம், அனைத்திலும் 100% வெற்றி நிச்சயம் !!!
""""""""""""""""""""""""""""""""""""""""""""
இதுவரையில் எண் கணித சோதிடத்தின் முக்கிய விஷயங்களை பற்றி கண்டறிய விளக்கினோம். இனி ஒவ்வொரு எண் அலைவரிசையில் பிறந்தவர்களுடைய பலா பலன்களை பற்றி காண்போம் :-
எண் 1 சூரியன் ஆதிக்கம் ( வீரியம் )
ஆங்கில ஆண்டு முழுவதும் எந்த மாதம் ஆனாலும் கூட அதில் 1, 10, 19, 28, ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் அவருக்கு பிறப்பு எண் 1 என்று அமையும். அது சூரியனுடைய ஆதிபத்தியம் பெற்ற எண் ஆகும். சூரிய ஆதிபத்தியத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தமது பிற்கால வாழ்க்கையில் மேலான இராஜ யோகப் பலன்களை அனுபவிக்கும் என்பது பொது விதி. அளவான சந்ததிகளைப் பெற்று வளமாக வாழக்கூடியதாகும், அருளும், பொருளும், புகழும், சரிசமமாக கலந்து வாழும் பாக்கியம் பெற்றிருக்கும். நன்பர், உறவினர்களுடன், ஒட்டியும், ஒட்டாமலும் போன்ற நடுத்தரமான போக்கு நிலைபெற்று இருக்கும். இவர்களுக்கு அதிக அளவில் பணியாட்கள் அமையாவிட்டாலும் ஒரு
சில ஆளடிமை இருக்கத்தான் செய்யும். இவர்களுக்கு தன் கடமையில் தான் அதிக கவனம் இருக்கும். பகை வெல்லும் திறன் உண்டு என்பதால் எப்படிப்பட்ட எதிர்ப்பையும் துணிவுடன் எதிர் கொண்டு பரிபூரண வெற்றி பெறுவார்கள். மிதமான தெய்வ பக்தியும், உறுதியான தன்னம்பிக்கையும் உடையவர்களாகவே இருப்பர். நீதிக்கு பணிவார்கள் நேர்மை காவலர்களாகவும் இருப்பர் !!
இந்த 1 எண் அலைவரிசையில் பிறந்த சில
முக்கிய பிரமுகர்கள் :-
1, முன்னாள் பாரத பிரதமர் திருமதி இந்திராகாந்தி நவம்பர் 19 ஆம் தேதி
2, மைசூரை ஆண்ட திப்பு சுல்தான்
டிசம்பர் 1 ஆம் தேதி.
3, ஏழிசை மன்னர் M K தியாகராஜ பாகவதர் மே 19 ஆம் தேதி.
4, நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
அக்டோபர் 1 ஆம் தேதி.
இந்த எண் உடையவர்களின் ராசியான கிழமைகள், எண்கள், தேதிகள், நிறங்கள், மற்றும் ரத்தினங்கள் :-
1 ராசியான கிழமைகள், வியாழன், ஞாயிறு, திங்கள்.
2, ராசியான தேதிகள் 1-10-13-28-2-11-20 மற்றும் 29,
3, ராசியான நிறங்கள், ஆரஞ்சு, மற்றும் பொன்னிறம்.
4, ராசியான கற்கள் மாணிக்கம் ( சிகப்பு )
5 யோகமான வயது 1-10-19-28-37-46-55-
64,மற்றும் 73.
6, எல்லா வகையிலும் ராசியான எண்கள்
2, 3- 5- 9.
7, பகை எண்கள் 4, 6, 7, 8.
8, திருமணத்திற்கான வயது 18, 19 21, 23,
27.
9, யோகமான வீட்டு அமைப்பு தெற்கு,
அல்லது வடக்கு பார்த்த வீடு.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
எண் 2 சந்திரன் ( சாந்தம் )
ஆங்கில மாதம் எதுவாகினும் கூட அந்த மாதத்தில் 2, 11, 20, 29, ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் அவருக்கு பிறப்பு எண் 2 என்று அமையும். அது சந்திர ஆதிபத்தியம் பெற்ற எண்ணாகும். சந்திர ஆதிபத்தியம் அம்சத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தமது பிற்கால வாழ்க்கையில் இருவேறு வாழ்க்கையினை அனுபவிக்கும். என்பது பொது விதி. இதற்கு காரணம் பிரதி மாதம் சந்திரன் தேய்ந்து, வளரும்,அல்லது வளர்ந்து தேய்ந்து பிறை வடிவம் தோற்றம் ஏற்படுத்த கூடியது தான். ஆக சந்திரனுக்கு ஏற்படும் நிலை போல சந்திர ஆதிக்கத்திற்கு உட்பட்ட மனிதர்களுடைய நிலையும் ஏற்றத் தாழ்வு கொண்டதாகவே அமையும். என்பது தத்துவ உண்மை. இது நடைமுறையில் நூற்றுக்கு நூறு சாத்தியமாகிறது. அமரபட்சம், கிருஷணபட்சம், என்றும் சொல்லப்படுகிற தேய்பிறையில் திதியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் பற்பல இடையூரும், பிரச்சினைகளும், குறுக்கிட்டு கொண்டே இருக்கும். ஆனாலும் இவர்கள் தெய்வ பக்தியில் அதிக நம்பிக்கையோடு தமது வாழ்க்கையை எப்படியும் சிறப்போடு நடத்த கடினமாக உழைத்து முன்னேறுவர் ! பூர்வபட்சம், சுக்கில பட்சம், என்றும் சொல்ல கூடிய வளர்பிறை திதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல செய்கையும் அவர்களை தானாக தேடிவரும்.அவர்கள் சிறிதளவு முயற்சிகள் செய்தாலும் பூரண வெற்றி பெருவார்கள். அதிர்ஷ்ட விலாசம் இவர்கள் பக்கம் இருக்கும். இவர்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பர். இவர்களின் வாழ்க்கை படிப்படியாக உயரும்.
இந்த 2 அலைவரிசையில் பிறந்த சில முக்கிய பிரமுகர்கள் :-
1, மகாத்மா காந்தி அக்டோபர் 2ஆம் .தேதி
2, புரட்சித் தலைவர் M G ராமச்சந்திரன் ஜனவரி 11 ஆம் தேதி
3, லால்பகதூர் சாஸ்த்திரி அக்டோபர் 2 ஆம் தேதி.
4, சுப்ரமணிய பாரதியார் - டிசம்பர் 11 ஆம் தேதி.
இந்த எண் உடையவர்களின் ராசியான கிழமைகள், எண்கள், தேதிகள், நிறங்கள், மற்றும் ரத்தினங்கள் :-
1, ராசியான கிழமைகள் -ஞாயிறு, திங்கள், வியாழன்.
2, ராசியான தேதிகள் - 2,11,20,29,1,10,19, 28.
3, ராசியான நிறங்கள்- வெண்மை, ஆரஞ்சு, பொன்னிறம்.
4, ராசியான மோதிர கற்கள் - முத்துக்கள்.
5, யோகமான வயது- 11,20,29,37,47,55,73.
6,எல்லா வகையிலும் ராசியான எண்கள்,
1, 7, 9.
7, பகை எண்கள் - 4, 6, 8.
8, திருமணத்திற்கான வயது 20, 27, 29.
9, யோகமான வீட்டு அமைப்பு- வடக்கு அல்லது தெற்கு பார்த்த வீடு .
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
எண் 3 குரு ( உபதேசம் )
ஆங்கில மாதம் எதுவாயினும் அந்தமாதம் 3,-12- 21- 30- ஆகிய தேதிகளில் பிறந்து இருந்தால் அவர்களுக்கு பிறப்பு எண் 3 என்று அமையும். இது குருவின் ஆதிபத்ய அம்சம் கொண்ட எண். குருவின் ஆதிபத்யத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தமது பிற்கால வாழ்க்கையில் குருபீட, ஞானபீட, அமைப்பு போன்ற வற்றில் தலைமையான ஸ்தானம் வகிக்கும் என்பது பொது விதி ! அதற்கு காரணம் நவ கோள்களில் பிரதான சுபர் அம்சம் வகிப்பது இக் குருவே ஆகும்.
" புலி இளைத்தாலும் புல்லை தின்னாது" என்கிற பழ மொழிக்கு ஏற்ப குரு ஆதிபத்யம் உடையவர்கள் எவ்வளவு தான் தாழ்நிலை அடைந்தாலும் கூட அவர்களின் கஷ்ட, நஷ்ட, நிலையை அடுத்தவரிடம் எடுத்து சொல்லி உதவி கேட்க மாட்டார்கள்.குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்கிற வாசகபடிக்கு உற்ற வகையில் இவர்களுடன் கூட்டு சேரக் கூடிய எவரும் தமது தாழ்ந்த நிலயிலிருந்து அதிவிரைவில் மீண்டு மிக உன்னதமான உயர் நிலையை அடைவர். என்பதும் கூட பொது விதி !! ஆக குரு ஆதிபத்யம் பெற்றவர்களுக்கு, கல்வி ஞானம், கேள்வி ஞானம், ஆராட்சி திறன், தர்கவாதம், பரோபகார சிந்தனை, பகை வெல்லும் திறன், அரச பரிபாலனம், சமுதாயநல கொள்கை, போன்றவற்றில் ஈடு இணையற்று விளங்குவார்கள். மேலும் இவர்கள் தற்செயலாக எதாவது பிழையாக சொல்லி விட்டாலும், அது ஒரு வகையில் உண்மை என்றே ஆகிடும். அந்த அளவுக்கு வாக்கு பலிதம் உடையவர்கள் !!
இந்த 3 எண் அலைவரிசையில் பிறந்த சில முக்கிய பிரமுகர்கள் :-
1, ஸ்வாமி விவேகாணந்தர்- ஜனவரி 12 ஆம் தேதி.
2, பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் அக்டோபர் 30 ஆம் தேதி.
3, டாக்டர் கலைஞர் மு கருணாநிதி ஜீன் 3 ஆம் தேதி.
4, டாக்டர் ராஜேந்திர பிரசாத் டிசம்பர் 3 ஆம் தேதி.
இந்த எண் உடையவர்களின் ராசியான கிழமைகள், எண்கள், தேதிகள், நிறங்கள், மற்றும் ரத்தினங்கள் :-
1, ராசியான கிழமைகள்- திங்கள், செவ்வாய்,
2, ராசியான தேதிகள் - 3,12,21,30,9,18,27.
3, ராசியான நிறங்கள்- மஞ்சள்,செந்தாமரை.
4, ராசியான மோதிர கல் - கனக புஷ்பராகம்.
5, யோகமான வயது- 3,12,21,30,39,48,57,66,
6, எல்லா வகையிலும் ராசியான எண்கள்
1, 3, 9.
7 பகை எண்கள் - 4, 5, 7.
8, திருமணத்திற்கான வயது - 20,21,27,30,
9, யோகமான வீட்டு அமைப்பு- தெற்கு பார்த்த வீடு .
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
எண் 4 ராகு ( யோகம் )
ஆங்கில மாதம் எதுவாகினும் அந்த மாதம்
4- 13- 22- 31- ஆகிய தேதிகளில் பிறந்த எவருக்கும் அவரது பிறப்பு எண் 4 என்று அமையும். இது ராகுவின் ஆதிபத்தியம் பெற்ற எண்ணாகும். ராகு ஆதிபத்யத்தில் பிறந்த குழந்தை ஒவ்வொன்றும் தமது பிற்கால வாழ்க்கையில் எங்கு இருப்பினும் எந்த துறையில் ஈடுபாடு கொண்டிருப்பின்
அவர்கள் முக்கியமாக யோகம் கொண்டே இருப்பார்கள். ராகு ஆதிபத்யம் பெற்றவர்கள் கூடியவரை நடனம், நாடகம், சினிமா, சங்கீதம், கவிதை, காவியம், போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எடுக்கும் முடிவை மற்றவர் எவராலும் கூட மாற்றி அமைக்க முடியாது. எண்ணியதை எண்ணிய படியே செய்து முடிக்கக் கூடிய செயலாற்றல் பெற்றவர்களாகவே இருப்பார்கள். இவர்களுக்கு நன்பர்களால் இடையூறுகள் ஏற்படக் கூடும். இவர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது மிகவும் சிரமமே. மேலும் இவர்கள் குறுகிய காலத்திலோ அல்லது குறுக்கு வழியிலோ பணம் சேர்க்க்கூடிய மனிதர்களாக இருப்பார்கள். மேலும் ரசாயனம், மாந்திரீகம், போன்ற துறைகளில் தனிப்பட்ட ரசனை இருக்கும். உயர்ந்தவர், தாழ்ந்தவர், என்கிற பேதம் பாராட்டாமல்
அனைவரிடத்திலும் சரிசமமாக பழகுவர். தமது அன்னையிடம் அதிக பிரியமாகவும் அன்னைக்காக நிறைய செலவுகள் செய்ய கூடியவராக வரும் இருப்பார்கள் !!
இந்த 4 எண் வரிசையில் பிறந்த சில முக்கிய பிரமுகர்கள் :-
1, கவிக்குயில் சரோஜினி நாயுடு பிப்ரவரி 13 ஆம் தேதி.
2, வைர நெஞ்சம் வல்லபாய் பட்டேல் அக்டோபர் 31 ஆம் தேதி.
3, தியாகராஜ கீர்த்தனை புகழ் தியாகராஜ ஸ்வாமிகள் மே 4 ஆம் தேதி.
4, கணித மேதை ராமானுஜம் டிசம்பர் 22
ஆம் தேதி.
இந்த எண் உடையவர்களின் ராசியான கிழமைகள், எண்கள், தேதிகள், நிறங்கள், மற்றும் ரத்தினங்கள் :-
1, ராசியான கிழமைகள் - புதன், வெள்ளி.
2, ராசியான தேதிகள் - 4-12-22-31.
3, ராசியான நிறங்கள்-- மஞ்சள், நீலம், மற்றும் சாம்பல் நிறம்.
4, ராசியான மோதிர கல்- கோமேதக கல்.
5, யோகமான வயது- 4,13,22,31,40,48,58,67.
6, எல்லா வகையிலும் ராசியான எண்கள்
5, 6,7.
7, பகை எண்கள் - 1, 2 .
8, திருமணத்திற்கான வயது- 22,23,24,25.
5, யோகமான வீட்டு அமைப்பு-- கிழக்கு, அல்து மேற்கு பார்த்த வீடு.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
எண் 5 புதன் ( விவேகம் )
ஆங்கில மாதம் எதுவாயினும் அந்தமாதம் 5- 14- 23- ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால் அவருக்கு பிறப்பு எண் 5 என்று அமையும். இது பதனின் ஆதிபத்யம் கூடிய எண்ணாகும். புதன் ஆதிக்கத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தமது பிற்கால வாழ்க்கையில் நல்ல பாண்டித்தியம் உள்ள மனிதர்களாக இருப்பர். உயர்ந்தவர், தாழ்ந்தவர், என வித்தியாசம் பாராமல் எல்லோரிடமும் சரிசமமாக பழகி நட்பு கொள்வர். இவர்களில் அனேகமாக கணிதம், எழுத்து, வாணசாஸ்திரம், தர்கம், பத்திரிகை துறை, அச்சுத் துறை, ஆகிய துறைகளில் ஈடுபாடுகள் கொள்வார்கள். "யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் " என்ற பாரதி வாய் மொழிக்கு ஏற்ப இவர்கள் எவருக்கும் அஞ்சாமல் அசகாய சூரர்களாக, பராக்கிரமசாலியாக விளங்குவார்கள். இவர்களுக்கு எப்படியும் குடும்பம் நல்லவிதத்தில் அமைந்துவிடும்.
இப் பிரிவினர்களில் அனேகர் உலக புகழை பெற கூடியவர்களாகவே இருப்பர். ஆரம்ப காலத்தில் இவர்களுடைய திட்டம் யாவும் தோல்வியை கண்டாலும் கூட கால போக்கில் அவைகள் அனைத்தும் ஒன்று விடாமல் வெற்றி பெற்று சாதனையாளர் ஆக்கிவிடும். எளியவர்களின் பாராட்டை
விட உயர்மட்ட மகான்கள், பெரியோர்களின், பாராட்டுகளும், பட்டங்களும் இவர்களை தாமாக தேடி வரும் !!
இந்த 5 எண் அலைவரிசையில் பிறந்த
சில முக்கிய பிரமுகர்கள் :-
1, பௌத்தம் ஸ்தாபகர் கௌதம் புத்தர்
ஏப்ரல் 14 ஆம் தேதி.
2, முடிசூடா மன்னன் ஜவகர்லால் நேரு
நவம்பர் 14 ஆம் தேதி.
3, வடலூர் ஜோதி இராமலிங்க சுவாமிகள்
செப்டம்பர் 5 ஆம் தேதி.
4, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை செப்டம்பர் 5 ஆம் தேதி.
இந்த எண் உடையவர்களின் ராசியான கிழமைகள், எண்கள், தேதிகள், நிறங்கள், மற்றும் ரத்தினங்கள்.
1, ராசியான கிழமைகள் - ஞாயிறு, புதன், மற்றும் வெள்ளி.
2, ராசியான தேதிகள்- 5-14-23-6-15-24.
3, ராசியான நிறங்கள்- சாம்பல் நிறம், வெளிர் பச்சை.
4, ராசியான மோதிர கல்- எமரால்டு எனும் மரகத பச்சை.
5, யோகமான வயது- 5,14,23,32,41,50,59,68.
6, எல்லா வகையிலும் ராசியான எண்கள்
5- 6-1.
7, பகை எண்கள் - 2-3-9.
8, திருமணத்திற்கான வயது - 19,23,24,26,28.
9, யோகமான வீட்டு அமைப்பு- கிழக்கு, அல்லது மேற்கு பார்த்த வீடு.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
எண் 6 சுக்கிரன் ( இன்பம் )
ஆங்கில மாதம் எதுவாயினும் அந்தமாதம் 6-15-24- ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் அவருக்கு பிறப்பு எண் 6 என்று அமையும். இது சுக்கிரனுடைய ஆதிபத்யம் பெற்ற எண் ஆகும்.
சுக்கிர ஆதிபத்யத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தமது பிற்கால வாழ்க்கையை நன்கு ரசித்து வாழ்வார்கள். எளிமையிலும் இன்பம் காண்பதே இவர்களுடைய லட்சியம் ஆகும். சமுதாய சீர்திருத்த்திற்க்காக இயல், இசை, நாடகம், ஆகிய முக்கோணங்களின் மூலம் தம்மாலான தொண்டுகளை செய்து வருவார்கள். இவர்கள் நடுத்தர உயரமும், எடுப்பான தோற்றமும் உடையவர்களாக இருப்பார்கள். நகைச்சுவையாக பேசி கனீர் என்று சிரிக்க வைப்பார்கள். சிறு பணியில் அமர்ந்தாலும் கூட மிக குறுகிய காலத்தில் பெரும் பதவியை அடைந்து விடுவார்கள். இவர்களுக்கு தலைமை பதவி தாமாக தேடி வரும்.
இத்துறையில் ஈடுபட்டாலும் அத்துறையின் உள் ஆழத்தை காணும் வரை ஊன் உறங்க மாட்டார்கள். சுருங்கச் சொன்னால் விடா முயற்சி உடையவர்கள். இவர்கள் உண்ணும் உணவை நன்றாக சுவைத்தும் ரசித்தும் உண்பார்கள். எப்படிப்பட்ட துன்பம் வந்த போதும் சற்றும் மனம் தளர மாட்டார்கள். சுக்கிரன் ஓர் குளிர்ந்த கிரகம் என்பதால் இவர்களுக்கு சீதள சம்பந்தமான வியாதி சதா ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டே இருக்கும். நன்பர்கள், உறவினர்கள் மீது ஆசா, பாசம், கொண்டவர்கள். வாழ்வின் வேட்கையை விரும்பி வரவேற்பார்கள். பொதுவாக தியாக மனப்பான்மையுடன் வாழ்வார்கள் !!
இந்த 6 எண் அலைவரிசையில் பிறந்த
சில முக்கிய பிரமுகர்கள் :-
1, பெருந்தலைவர் கு காமராஜர் ஜீலை
15 ஆம் தேதி.
2, அறிஞர் சி என் அண்ணாதுரை செப்டம்பர் 15 ஆம் தேதி.
3, எகிப்த்து நாசர் ஜனவரி 6 ஆம் தேதி.
4, ரோமாபுரி நீரோ மன்னன் டிசம்பர் 15
ஆம் தேதி.
இந்த எண் உடையவர்களின் ராசியான கிழமைகள், எண்கள், தேதிகள், நிறங்கள், மற்றும் ரத்தினங்கள்.
1, ராசியான கிழமைகள் - புதன்,வெள்ளி, மற்றும் சனி.
2, ராசியான தேதிகள் - 6,15,24,5,14,23.
3, ராசியான நிறங்கள்- வெள்ளை,பச்சை, மற்றும் நீலம்.
4, ராசியான மோதிர கல் - வைரம்.
5, யோகமான வயது- 6,15,24,33,42,54,60,69,
6, எல்லா வகையிலும் ராசியான எண்கள்
5- 6- 8.
7, பகை எண்கள் - 1-2-3.
8, திருமணத்திற்கான வயது- 17,22,24,25,26.
9, யோகமான வீட்டு அமைப்பு- கிழக்கு அல்லது மேற்கு பார்த்த வீடு.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
எண் 7 கேது ( ஞானம் )
ஆங்கில மாதம் எதுவாயினும் அந்தமாதம் 7-16-25- தேதிகளில் பிறந்திருந்தால் அவருக்கு பிறப்பு எண் 7 என்று அமையும். அது கேதுவின் ஆதிபத்யம் உடைய எண் ஆகும்.
கேது ஆதிபத்யத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தமது பிற்கால வாழ்க்கையில் பெரிய ஞானசீலராக திகழ்வர். இவர்கள் பள்ளிப்படிப்பை விட உலகியல் அனுபவம், பற்றிய பறந்த அறிவும், பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு பொருள் செல்வத்தை விட அருட் செல்வம் அதிகமாக இருக்கும். அது மட்டுமல்லாது இவர்கள் பெரும்பாலும் மதம், கல்வி, விஞ்ஞானம், மருத்துவம், போன்ற துறைகளில் ஈடுபாடு அதிகம் இருக்கும். அஞ்சா நெஞ்சம், அபார ஞான, சன்மார்க்க நெறி கொண்டவர்களாகவே இருப்பர். ஒருசிலர் இல்லறத்தை விட்டு துறவறத்தில் அல்லது வெளிவட்டார பழக்க வழக்கத்திலும் அதிக ஆவல் உள்ளவர்களாக இருப்பர். இதன் காரணமாக தான் கேதுவை ஞானக் காரகன் என்று சொல்கின்றனர்.
கேது ஆதிபத்யத்தில் பிறந்தவர்கள் பக்தி மார்க்கத்திலும் பரந்த மனப்பான்மை கொண்டு விரிவாக உரையாடுவதிலும், காரசாரமாக பேசுவதிலும், நோய்களின் தன்மையறிந்து அதற்கு மருந்து கொடுக்கும் வகைகளை முறையோடு எடுத்துச் சொல்வதிலும் கூட அதிக வல்லமை உடையவர்களாக இருப்பர். இப்பிரிவினர்களில் பெரும் பாலோருக்கு திருமணம், பூப்படைதல், போன்ற சுபங்கள், காலாகாலத்தில் நடைபெறுவது இல்லை.
பலமுறை தடைபட்டு கொண்டே வந்து காலம் கடந்து இத்தகைய சுப சடங்குகள் நடைபெரும். இப்பிரிவினர் எங்கு இருப்பின் இவர்களை மிஞ்சி தலைமை பீடம் கொள்ள வேறு எவரும் இருக்க முடியாது !!
இந்த 7 எண் அலை வரிசையில் பிறந்த
சில முக்கிய பிரமுகர்கள் :-
1, ஆதி சங்கரர் - மார்ச் 25 ஆம் தேதி.
2" இயேசு கிரிஸ்த்து - டிசம்பர் 25 ஆம் தேதி.
3, இரவீந்திரநாத் தாகூர்- மே 7 ஆம் தேதி.
4, சார்லி சாப்ளின் - ஏப்ரல் 16 ஆம் தேதி.
இந்த எண் உடையவர்களின் ராசியான கிழமைகள், எண்கள், தேதிகள், நிறங்கள மற்றும் ரத்தினங்கள்.
1, ராசியான கிழமைகள் - செவ்வாய், புதன், மற்றும் வெள்ளி.
2, ராசியான தேதிகள் - 7,25,5,14,25.
3, ராசியான நிறங்கள்- பச்சை, ஆரஞ்சு.
4, ராசியான மோதிர கல்- வைடூரியம்.
5, யோகமான வயது- 7,16,25,34,43,52,61,
6, எல்லா வகையிலும் ராசியான எண்கள்
7-5-6.
7, பகை எண்கள் - 1- 2.
8, திருமணத்திற்கான வயது -16,22,23,24, 25,34.
9, யோகமான வீட்டு அமைப்பு- கிழக்கு அல்லது மேற்கு பார்த்த வீடு.
""""""""""""""""""""""""""""""""""""""""""""
எண் 8 சனி ( மந்தம்)
ஆங்கில மாதம் எதுவாயினும் அந்த மாதத்தில் 8-17-26, ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் அவருக்கு பிறப்பு எண் 8 என்று அமையும். அது சனி ஆதிபத்தியம் உடைய எண்ணாகும்.
சனியின் ஆதிபத்தியத்தில் பிறந்த எந்த ஒரு குழந்தையும் தம் பிற்கால வாழ்வில் எவ்வளவு திறமை பெற்றிருந்தாலும் கூட அதிர்ஷ்ட கட்டையான சோகமே கூடிய நிலையில் வாழும் என்பது பொதுவிதி. ஆக நிதானமான போக்கும் மந்தமான நடையுமிருக்கும்.
சனி ஆதிக்கம் உடையவர்கள் பெரும் பாலோர் வியாபாரிகளாகவும் ரொக்க லேவாதேவி செய்யக் கூடியவர்களாக, இரும்பு இயந்திரம், ஆலை அச்சுபொறி ஆட்டோ மொபைல்ஸ் போன்ற துறை சார்ந்த வியாபாரங்கள் செய்பவர்களாக இருப்பார்கள். அரசியலிலும் கூட ஓரளவு ஈடுபாடு ஏற்படும். கலை, கவிதை, மதம், சம்பந்தபட்ட துறையிலும் சிறிது ஈடுபாடு இருக்கும். எத்துறையிலும் இலைமறைவு கனிபோல இருக்கக்கூடிய வாய்ப்புகளே உண்டாகும். இவர்கள் அதிக மேம்பாடும் அடையாது தாழ்ந்த நிலையும் பெறாத நடுத்தரமான போக்கினை கடை பிடிக்கக் கூடியவர்களாவே இருப்பார்கள்.
சனி ஆதிக்கம் உடையவர்களுக்கு நல்ல குடும்ப அமைப்பு ஏற்பட்டாலும் கூட அதில் ஏதாவது ஒரு குறைபாடு இருக்க செய்யும் இவர்களில் சிலருக்கு திருமணம் எளிது கூடி வராது பலமுறை தடைபட்டுத் தான் கைகூடும். இவர்கள் அளவான குடும்ப அமைப்பையும், மிதமான கல்வியும் பெற்று இருப்பார்கள். மற்றவர்களுடைய ஏச்சு பேச்சுகளுக்கு ஒருபோதும் கலங்கிட மாட்டார்கள்.தெய்வாதீனமாக பிறருடைய சொத்துக்களை அனுபவிக்கக் கூடிய பாக்கியத்தை பெற்று விடுவார்கள் !!
இந்த 8 எண் அலைவரிசையில் பிறந்த
சில பிறமுகர்கள் :-
1, ம, பொ, சிவஞானம். ஜீன் 26 ம் தேதி
2, அறிஞர் பெர்ணாட்ஷா ஜீன் 26,
3, ஈ வெ ராமசாமி நாயக்கர் செப் 17
4, சீக்கிய மத ஸ்தாபகர் குரு நானக்
நவம்பர் 8.
இந்த எண் உடைமவர்களின் ராசியான கிழமைகள், எண்கள், தேதிகள், நிறங்கள்
மற்றும் ராசி கற்கள் :-
1, ராசியான கிழமைகள் - புதன், வெள்ளி,
மற்றும் சனி,
2, ராசியான தேதிகள்- 23-24-28.
3, ராசியான நிறங்கள்- நீலம், பச்சை,
சாம்பல் நிறம்.
4, ராசியான ரத்தினம் ( ராசிக்கல் )
நீலக்கல், ப்ளு டைமண்ட்.
5, யோகமான வயது - 8-17-26-35-44-53-
62-71.
6, எல்லா வகையிலும் ராசியான எண்கள்
5-6-8.
7, எல்லா வகையிலும் பகை எண்கள்,
1- 2- 3.
8, திருமணத்திற்கான வயது - 17- 23-
24- 26.
9, யோகமான வீட்டு அமைப்பு - மேற்கு,
அல்லது கிழக்கு பார்த்த வீடு
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
எண் 9 அங்காரகன் (செவ்வாய்)
சமத்துவம் .
ஆங்கில மாதம் எதுவாயினும் அந்த மாதத்தில் 9-18-27- ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் அவருக்கு பிறப்பு எண் 9 என்று அமையும். அது அங்காரகனுடைய (செவ்வாய்) ஆதிபத்தியம் உடைய எண் ஆகும்.
செவ்வாய் ஆதிபத்தியத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தம் பிற்கால வாழ்க்கையில் உலகப்புகழ் பெறகூடிம அம்சத்தினர் ஆவர் விஞ்ஞானம், தத்துவ ஆராட்சி, அரசியல், போன்றவற்றில் மிக பெரும்பங்கு வகிக்கக கூடியவர்களாக திகழ்வர். கலைத்துறையிலும் ஓரளவு ஈடுபாடு உண்டாகும் இவர்கள் சிவந்த மேனியை உடையவர்களாக இருப்பர்.
செவ்வாய் ஆதிபத்தியம் உடையவர்கள் மாற்றான் வலிமையை அறிந்து அதற்கு ஏற்றார் போல் தமது கொள்கைகளையும் மாற்றி கொள்வார்கள். வாத,பிரதி வாதம், செய்வதில் இவர்களை வெல்வது இயலா காரியம். அரசியல் நுணுக்கம் அறிந்து அதற்கு ஏற்ப தமது கொள்கையை மாற்றி கொள்வார்கள். இவர்களுக்கு கல்வி இள வயதில் பாதிக்கப்படும். என்றாலும் கூட எப்படியாவது கல்வியறிவை பெற்றும் விடுவார்கள் இவர்கள் உடலால் சிறுத்து இருந்தாலும் எண்ணத்தால், செயலால், மிகப்பெரும் பூதாகரமாக காடசியளிப்பர்.
இவர்களின் வாழ்க்கையில் பெருமளவு போராட்டமே அதிகமாக இருக்கும் இந்த பிரிவினர் முன்கால வாழ்க்கையை விட பிற்கால வாழ்க்கையே மிகவும் சிறப்பாக இருக்கும். கோபம் வந்தால் எரிமலையாக குமுறுவார்கள். சாத்வீகமாக இருந்தால் இவர்களைப் போல பாசமாக பழகுபவர் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே ஆக மொத்தத்தில் செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள ஒவ்வொருவரும் கூடவே ஆல் ரவுண்டராக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை !!!
இந்த 9 ஆம் எண் அலைவரிசையில் பிறந்த சில பிறமுகர்கள் :-
1, விஜயலட்சுமி பண்டிட் ஆகஸ்ட் 18,
2, இராஜ கோபாலாச்சாரி ( இராஜாஜி )
டிசம்பர் 9 ஆம் தேதி.
இந்த எண் உடையவர்களின் ராசியான கிழமைகள், எண்கள், தேதிகள், நிறங்கள் மற்றும் ராசி கற்கள்:-
1, ராசியான கிழமைகள் --- ஞாயிறு-
திங்கள், செவ்வாய்.
2, ராசியான தேதிகள் --- 1, 2, 3, 9,10,11,12,
18, 19, 20.
3, ராசியான நிறங்கள் - சிகப்பு - மஞ்சள்.
4, ராசியான ரத்தினம் (ராசிகாகல்)
பவளம்.
5, யோகமான வயது -9,18,27,36,45,54,
63, 72.
6, எல்லா வகையிலும் ராசியான எண்கள்
1, 2, 3,9.
7, எல்லா வகையிலும் பகை எண்கள்-
5, 8.
8, திருமணத்திற்கான வயது -18,20,21,27
9, யோகமான வீட்டு அமைப்பு - தெற்கு,
அல்லது வடக்கு பார்த்த வீடு.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மேற்கண்ட பதிவு சற்று நீண்டதாக இருந்த போதிலும் இதை தள்ளி விடாது முழுவதும் படித்து அவரவர் பிறந்த தேதி படியான எண் கணித சோதிடமும் ராசிகற்கள் அணியும் முறையையும் அறிந்து கூடிய வரை தங்கள் பிறவி யோக பாவங்கள் அறியலாம் ! இது யார் யாருக்கு எந்த விதத்தில் ஒத்துப் போக கூடியதாக இருக்கிறது என்பதை உணர்ந்து கமெண்ட் செய்யவும் !!
வாழ்க்கை வாழ்வதற்கே" நாமும் வாழ்ந்து மற்றவர்கள் வாழவும் வழி விடுவோம் !!!
படைப்பு :- " அமுத அறிஞர், விசுவகவி "
வை நடராஜன.
*****************************************
குறிப்பு :- அனைவருக்கும் தேவையான ராசிக்கல் மோதிரங்கள் வெள்ளியில் செய்தது உடனடியாக கிடைக்கும்.
தங்கத்தில் ஆர்டரின் பேரில் செய்து தருகிறோம் !! தரமான ஒரிஜினல் நவரத்தின கற்கள் பதித்த மோதிரம், டாலர், மற்றும் வளையல்கள் தக்க உயர் உத்திரவாதத்துடன் செய்து தருகிறோம்.
ஸ்ரீ தனலெட்சுமி ஜுவல்லரி & ஜெம்ஸ்
V நடராஜ பத்தர் & சன்ஸ்
V N P ஆபரண தொழிலகம்.
ஸ்ரீ புனுகீஸ்வரர் வடக்கு வீதி
கூறைநாடு. மயிலாடுதுறை.
செல் :- 9442932455

Comments
Post a Comment